பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை ஷேர் செய்து, பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவை போலி செய்திகளை பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் கைகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் - ராகுல் காந்தி - வாட்ஸ்அப்
டெல்லி: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை கைப்பற்றி, பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவை போலி செய்திகளை பரப்பி வருகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
BJP, RSS control Facebook and Whatsapp
ராகுல் காந்தியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சொந்தக் கட்சியில் இருப்பவர்களிடம் கூட செல்வாக்கு செலுத்த முடியாதவர்தான் இந்த உலகத்தையே பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்குகிறது என பேசிக்கொண்டிருப்பார்கள். தேர்தல் நேரத்தில் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா மற்றும் பேஸ்புக் உடன் தொடர்பு வைத்திருந்து கையும் களவுமாக சிக்கிய நீங்கள், எங்களை கேள்வி கேட்கிறீர்களா என ட்வீட் செய்துள்ளார்.