தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் - Priyanka Gandhi, Hardik Patel

டெல்லி: ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

BJP repeatedly harassing Hardik Patel: Priyanka Gandhi
BJP repeatedly harassing Hardik Patel: Priyanka Gandhi

By

Published : Jan 19, 2020, 10:45 PM IST

குஜராத்தின் இளம் அரசியல்வாதியான ஹர்திக் பட்டேல் கைதுசெய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்தார். அந்த இந்தி பதிப்பின் தமிழாக்கம்:

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்த்திக் தனது சமூக மக்களுக்கு குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். விவசாயிகளுக்கு தோள்கொடுக்கிறார். இதனை பாஜக 'தேசத்துரோகம்' என்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பட்டேல் மீது 2005ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு ஒன்று பதியப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் ஹர்திக் பட்டேல் தவிர்த்துவந்தார். இதையடுத்து அவரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்பேரில் ஹர்திக் பட்டேல் குஜராத் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ஹர்திக் படேலுக்கு ஜன.24 வரை நீதிமன்ற காவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details