தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! - டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக

டெல்லி: நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

Delhi assembly polls
Delhi assembly polls

By

Published : Jan 17, 2020, 10:52 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன.

ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வெளியிட்டார்

இதில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் போட்டியிடும் புது டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க: பிகார் முதலமைச்சர் - தலாய்லாமா சந்திப்பின் பின்னணி

ABOUT THE AUTHOR

...view details