70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) பாஜக டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் வெளியிட்டனர். இதில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தகவல் ஒலிபரப்புத் துறை பிரகாஷ் ஜவடேகர், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.