புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக குறிப்பிட்ட பணத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், மின்சார கட்டண உயர்வு, குப்பை வரி உள்ளிட்ட பொது சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும் புதுச்சேரி பாஜகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமையில் அமுதசுரபி அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவை அலுவலகம் அருகே பேரணியாக வந்தடைந்தனர்.