புதுச்சேரி முஸ்லிம் இனத்தவரின் வஃபோடு வாரியத்தில் இதுநாள் வரையிலும் உறுப்பினர் சேர்க்கை நடத்தாமல் உள்ளனர். மேலும் மத்திய அரசு சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு அத்திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்தாமல் உள்ளது. இந்த போக்கை கண்டித்து புதுச்சேரி பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் அலுவலகம் எதிரே நடைபெற்றது.
புதுச்சேரி முதலமைச்சரை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்! - பாஜக
புதுச்சேரி: மத்திய அரசு சிறுபான்மையினருக்கு அறிவித்துள்ள திட்டங்களை புதுச்சேரியில் அமல்படுத்தாத அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, பாஜக சிறுபான்மையினர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
BJP protest
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மையினர் அணித் தலைவர் சாகுல் தலைமை தாங்கினார். மேலும் பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது மத்திய அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும், வக்பு வாரியம் நீண்ட நாளாக உறுப்பினர் சேர்க்கை நடத்தாமல் உள்ளது. அதனால், மீண்டும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.