ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் தரும் தனியார் மதுபான கடைகளை அரசு ஏலம் விட வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் காரைக்கால் கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டைப் போல கேபிள் டிவியை புதுவை அரசே ஏற்று நடத்த வேண்டும், புதுச்சேரி அரசு உடனடியாக டீசல், பெட்ரோலுக்கான கரோனா வரியை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.