கரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து மக்கள் பலர் தவித்துவரும் நிலையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசிகூட இதுவரை வழங்கவில்லை எனப் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ஒன்றரை லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.