தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை குறித்து கருத்து கூற மறுத்த ஜே.பி. நட்டா! - டெல்லி வன்முறை குறித்து கருத்து கூற மறுத்த பாஜக தலைவர்

சிம்லா: டெல்லி வன்முறை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா பதில் கூற மறுத்துள்ளார்.

Nadda
Nadda

By

Published : Feb 28, 2020, 10:08 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் 26 வயதான அன்கித் சர்மா உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையிஸ், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வீர்பத்ர சிங் வீட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் டெல்லி வன்முறை குறித்து கேள்வி எழுப்பினர்.

நட்டா

ஆனால், நட்டா அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீர்பத்ர சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிய நட்டா அங்கு சென்றுள்ளார். இது குறுத்து நட்டா கூறுகையில், "வீர்பத்ர சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நான் அவர் உடல்நிலை குறித்து கேட்டறியவில்லை.

எனவே, இது குறித்து விசாரிக்கவே இங்கு வந்துள்ளேன். 1993ஆம் ஆண்டு, வீர்பத்ர சிங் முதலமைச்சராக இருந்தபோது, நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். அப்போதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்" என்றார்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை: அமித் ஷா முன்பு சீறிய மம்தா

ABOUT THE AUTHOR

...view details