குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்துவந்த போராட்டம், கடந்த இரு தினங்களில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை ஒரு காவல் அலுவலர் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது காவலர் ரத்தன் லால் உயிரிழந்துள்ளார். அவருடைய தியாகத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். எனவே, நாங்கள் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், ரூ.1 கோடி நிவாரணமும் வழங்குவோம்” என்றார்.
இதைப் போலவே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு, ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு தாய்மொழிக் கல்வி கட்டாயம் சிறப்பு சட்டம் இயற்றும் மகாராஷ்டிரா