டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களில் முறைகேடு செய்துவருவதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா, மக்கள் அனைவரும் பெருந்தொற்றினால் தவித்துவரும் இந்த வேளையில், பாஜக மக்களின் மனநிலையை கெடுக்கும்விதமாக அநாகரிக அரசியலில் ஈடுபட்டுவருகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் பாஜகவின் மனுவினை ஏற்க மறுத்துள்ளதை வரவேற்கிறேன். டெல்லி அரசு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சரியான தகவல்களை அறிவித்துவருகிறது. மக்களை பதற்றமாக்கவே, எதிர்க்கட்சி தலைவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்றார்.