தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்த பாஜக புது வியூகம்! - பாஜக

டெல்லி: மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை வீழ்த்த பாஜக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் அக்கட்சி வகுத்த புதிய வியூகம் என்ன என்பது குறித்து யூகிக்க முடிகிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

SF

By

Published : Mar 22, 2019, 10:48 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலை பிரதமர் மோடி தலைமையிலான மத்தியத் தேர்தல் குழு தேர்வு செய்தது. இந்தக் குழுவில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தப் பட்டியலின்படி முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கான வேட்பாளர்களை பாஜக களமிறக்கியுள்ளது. சபரிமலை பிரச்னையில் முன்நின்று போராடிய கும்மண்ணம் ராஜசேகரனை முன்னாள் மத்திய அமைச்சர் சசீ தரூருக்கு எதிராகவும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மருத்துவர் உமேஷ் ஜாதவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசையை திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு எதிராகவும் களமிறக்கியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோற்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி இந்த முறையும் அமேதி தொகுதியிலேயே களமிறங்குகிறார்.

மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் காசியாபாத் தொகுதியிலும், மகேஷ் சர்மா நொய்டா தொகுதியிலும், கிரண் ரிஜிஜு கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்திலும், ஜிதேந்திர சிங் உத்தம்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

இதனால், காங்கிரஸ் கட்சியினர் மேலும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள பாஜவின் வியூகங்களுக்கு எந்தமாதிரியான அஸ்திரங்களை கையிலெடுக்கலாம் எனவும் யோசித்துவருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details