கடந்த திங்கள் கிழமை இந்தியா- சீனாவிடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இருபது இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக தனது கட்சி சார்ந்த பணிகளை ஒத்திவைப்பதாக தெரிவித்தது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அவரது ட்விட்டர் பக்கத்தில், "கால்வான் பள்ளத்தாக்கில் தாய்நாட்டைக் காக்கும்போது வீரமரணமடைந்த துணிச்சலான வீரர்களின் தியாகம் எப்போதும் நினைவில் இருக்கும். இந்த தேசம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது.
சீன ராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அடுத்த இரண்டு நாள்களுக்கு பாஜக சார்பில் நடைபெறவிருந்த அரசியல் சார்ந்த பணிகள், காணொலி மூலம் தற்போது நடைபெற்றுவரும் கூட்டங்கள் என அனைத்தும் அடுத்த இரு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.