மக்களவைத் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளே தேவைப்படும் நிலையில் கூட்டணி உதவியில்லாமல் பாஜக மட்டுமே அதனை ஈட்டும் நிலையில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
இன்று மாலை பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் - Results
டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றுவரும் நிலையில் பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாஜக
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாஜக தொண்டர்களைப் பிரதமர் மோடி கட்சி அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் மத்திய கேபினட் அமைச்சரவைக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.