ஹரியானா மாநிலத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை பாஜகவால் பெற முடியவில்லை என்றாலும், 40 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.
அதைத்தொடர்ந்து ஜன்னாயக் ஜந்தா கட்சி மற்றும் ஏழு சுயட்சை எம்எல்ஏகள் ஆகியோருடன் பாஜக ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்திலுள்ள பரோடா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ கிருஷ்ணா ஹூடா என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பரோடா தொகுதியில் பாஜக சார்பில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் போட்டியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.