17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலாவதாக பிரதமர் மோடி வராணாசி எம்பியாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
'ஜெயலலிதா வாழ்க' என்ற ரவிந்திரநாத்துக்கு பாஜக எம்.பிக்கள் வாழ்த்து
டெல்லி: 'ஜெயலலிதா வாழ்க' என முழக்கமிட்ட அதிமுக எம்.பி. ரவிந்திரநாத்துக்கு பாஜக எம்.பிக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ரவிந்திரநாத்
அப்போது பதவியேற்ற திமுக எம்.பி.க்கள் 'தமிழ்வாழ்க', 'கலைஞர் வாழ்க' என முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. ரவிந்தரநாத் குமார் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின் இறுதியில் அவர் 'வாழ்க எம்.ஜி.ஆர்', 'வாழ்க ஜெயலலிதா', 'வந்தே மாதரம்', 'ஜெய்ஹிந்த்' என முழக்கமிட்டார். அப்போது அவருக்கு பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.