காற்று மாசும் பருவநிலை மாற்றமும் குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்பிகள், டெல்லிக் காற்று மாசுக்கு முக்கிய காரணம் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று சாடியுள்ளனர்.
அப்போது மேற்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வேர்மா, "வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மற்றும் தூசிகளைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி முதலமைச்சர் விவசாயக் கழிவுகளை எரிப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறுவது பொறுப்பற்ற செயல். விளம்பரங்களுக்காக 600 கோடி ரூபாய் செலவழிக்கும் டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்குகிறது.
காற்று மாசுக்குக் காரணம் விவசாயிகள்தான் என்று குற்றம்சாட்டுவதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கிராம மக்களுக்கும் நகரவாசிகளுக்குமிடையே உள்ள பிளவை பெரிதுபடுத்துகிறார். மேலும், 'ஆட் ஈவன்' திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ. 70 கோடி செலவழித்த டெல்லி அரசு பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.