கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தீவிர விசுவாசியாக இருப்பவர் ஷோபா கரந்தலாஜே. ஷோபாவிற்கு நாடாளுமன்றத்தில் சீட் கொடுத்தவர் எடியூரப்பா. இந்த முறை தேர்தலில் எடியூரப்பா ஆட்சியை பிடித்திருந்தால் உறுதியாக ஷோபாவிற்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்கின்றனர் பாஜக பிரமுகர்கள்.
எடியூரப்பா முதலமைச்சராக வேண்டி 1001 படிக்கட்டுகள் ஏறிய எம்பி! - sammundeswari temple
பெங்களூரு: எடியூரப்பா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று பாஜக எம்பி ஷோபா 1001 படிக்கட்டுகள் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
shoba
தற்போது கர்நாடக அரசியலில் பல குளறுபடிகள் நிலவிவருவதால் ஆட்சி கவிழவும் வாய்ப்பு இருக்கிறது என்று கர்நாடக பாஜகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக மைசூரில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 1001 படிகட்டுகள் ஏறிச் சென்று ஷோபா பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். ஷோபாவுடன் பல பாஜக பிரமுகர்களும், ஆதரவாளரர்களும் சாமியை தரிசிக்கச் சென்றனர்.