நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி ரூபா கங்குலி, பாலிவுட்டில் ஏற்படும் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பாலிவுட் மக்களை போதைக்கு அடிமையாக்குகிறது - ரூபா கங்குலி - பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பால் பாலியல் குற்றச்சாட்டு
டெல்லி: பாலிவுட் திரைப்படத்துறை மக்களை கொன்று போதைக்கு அடிமையாக்கிவருகிறது என பாஜக எம்பி ரூபா கங்குலி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பாலிவுட் திரைப்படத் துறை மக்களை கொன்று போதைக்கு அடிமையாக்கி வருகிறது. பெண்களை அவமதிக்க வைக்கிறது. இருப்பினும் யாரும் எதுவும் செய்யவில்லை. மும்பை காவல் துறை ஏன் அமைதியாக உள்ளது. பாலிவுட்டில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் குறித்து முழுமையாக விசாரிப்பது மட்டுமின்றி குற்றவாளிகளை கண்டறிந்து கண்டிப்பாக தண்டனையளிக்க வேண்டும்.
மேலும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை பயல் கோஷ் குற்றஞ்சாட்டினார். ஆனால், இவ்விவகாரத்தில் பாலிவுட் திரைப்படத்துறையும், காவல் துறையும் அமைதி காப்பது ஏன்? என்றார்.