அலி ஃபைசல், பங்கஜ் திரிப்பாதி, திவ்யான்டு ஷர்மா ஆகியோரின் நடிப்பில் கரண் அன்சுமான், குர்மித் சிங் ஆகியோரின் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற வெப்சீரிஸ் மிர்சாபூர். இதன் இரண்டாவது பாகம் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வெளியான நிலையில், வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மிர்சாபூர் மாவட்டம் வன்முறைக்குள்ளான பகுதியாக இந்த சீரிஸில் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிரியா பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.