கர்நாடக சட்டப்பேரவையில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாளித்து ஆட்சியை தக்கவைக்க குமாரசாமி அரசுக்கு சொற்ப வாய்ப்புகளே உள்ளதாகக் கருதப்படுகிறது.
யோகா செய்துவிட்டு ஆட்சியைக் கவிழ்க்கப் புறப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள்! - vidhan soudha
பெங்களூரு: குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியைக் கவிழ்க்க எடியூரப்பா தலைமையிலான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் யோகா செய்துவிட்டு சட்டப்பேரவைக்குப் புறப்பட்டனர்.
Bus
இந்நிலையில், இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி தங்கள் ஆட்சியை நிறுவ பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்று காலை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் தங்கியிருந்த ராமாதா ஹோட்டலில் ஒன்றாக யோகா செய்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி சட்டப்பேரவை இருக்கும் விதான் சவுதா நோக்கி சொகுசுப் பேருந்தில் புறப்பட்டுள்ளனர்.நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் இன்று முடிவு தெரிந்துவிடும் என ஆர்வத்துடன் கிளம்பியுள்ளனர்.