தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நகராட்சி அலுவலரைத் தாக்கிய பாஜக எம்எல்ஏவுக்கு ஜாமீன்

போபால்: ஆக்கிரமிப்பை அகற்ற வந்த மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்க்கியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ

By

Published : Jun 30, 2019, 10:25 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணியில் கடந்த 26ஆம் தேதி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதிக்கு வந்த பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா அலுவலர்களை பணிச் செய்யவிடாமால் தடுத்தார்.

பின்னர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், பொதுமக்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலர் ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கினார். அதனை அங்கிருந்த காவல்துறையினர் தடுக்க முயன்றும், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார். இதை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களது செல்ஃபோனில் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த காணொளி வைரலானது.

இதையடுத்து, ஆகாஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து இந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகாஷ் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய்வர்கியா பாஜக மூத்தத் தலைவரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details