தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலயணை, போர்வையுடன் சட்டப்பேரவையில் நடைபோட்ட பாஜக எம்எல்ஏ! - கர்நாடக சட்டப்பேரவை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவினர் மேற்கொண்டுவரும் தர்ணா போராட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தலையணை, போர்வையுடன் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்துள்ளார்.

BJP MLA Prabhu Chavan

By

Published : Jul 18, 2019, 11:19 PM IST

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று நடந்த விவாதத்தின்போது, காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் கலந்துகொள்வதற்காக பாஜக எம்எல்ஏ பிரபு சாவன், தலயணை, போர்வையுடன் சட்டப்பேரவைக்கு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை மதியம் 1.30 மணிக்கும் நடத்தலாம் என அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா, முதலமைச்சர் குமாரசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details