குஜராத் மாநிலம், அஹமதாபாத் மாவட்டம் நரோடா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பல்ராம் தவானி. நரோடா நகரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி நீது தெஜ்வானி. இந்நிலையில், உள்ளூர் பிரச்னை குறித்து புகார் அளிப்தற்காக நித்து தெஜ்வானி, இன்று காலை பல்ராம் தவானியின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
பெண்ணை உதைத்த பாஜக எம்எல்ஏ - வைரல் வீடியோ - nitu tejwani
காந்திநகர்: குஜராத் மாநிலம் நரோடா நகரில் புகார் கொடுக்க வந்த பெண்ணை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் காலால் உதைத்து கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
bjp
சட்டப்பேரவை உறுப்பினர் பல்ராமும் அவரது கட்சித்தொண்டர்களும் புகார் கொடுக்க வந்த நித்துவை சாலையில் வைத்து அறைந்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர், கீழே விழுந்த நீதுவை, பல்ராம் காலால் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து, நித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கிய வீடியோ, செய்தி ஊடகங்களில் பரவியதையடுத்து பல்ராமின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
Last Updated : Jun 3, 2019, 9:34 PM IST