கட்டட தொழிலாளர்களுக்கு கட்டுமான கருவிகளை வழங்கும் விழா செப்டம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தும்சரில் நடந்தது. இதில் பங்கேற்ற அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சரண் வாக்மோர் பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் பெண் காவலரை சரண் இழிவாக பேசியுள்ளார்.
பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ! - Charan Waghmare
மும்பை: பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் சரண் வாக்மோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
bjp MLA
இதனையடுத்து, பாஜக எம்.எல்.ஏவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தும்சர் காவல்நிலையத்தில் அந்த பெண் காவலர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணை இழிவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சரண் வாக்மோரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.