பிகார் மாநிலத்தின் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரேணு தேவியின் சகோதரர் பினு, பெட்டியா பகுதியில் உள்ள மருந்துக்கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். கடையில் மருந்து வாங்கும்போது அங்கிருக்கும் கடைக்காரர் அவருக்கு எழுந்து நின்று மரியாதை தரவில்லை என்று அவரை தாக்கியுள்ளார்.
மருந்து கடைக்காரரை தாக்கிய முன்னாள் அமைச்சரின் சகோதரர்! - chemist
பாட்னா: பிகார் மாநில பாஜகவின் முன்னாள் அமைச்சர் ரேணு தேவியின் சகோதரருக்கு மருந்து கடைக்காரர் ஒருவர் மரியாதை தரவில்லை என்று கூறி அவரை பலமாக தாக்கிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பினு தாக்கியதில் மருந்துக் கடைக்காரர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், கடைக்காரரை பினு தாக்கியது அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் சிசிடிவி காட்சியை வைத்து பினு மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றது.
இது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரேணு தேவி கூறியதாவது, 'பினுவுடனோ அல்லது அவரது குடும்பத்துடனோ எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. தவறு யார் செய்தாலும் தவறுதான், அது நானாக இருந்தாலும்கூட! தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இது போன்ற தவறுகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றார்.