இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியை குப்பைகளின் தலைநகராக பாஜக தரம் தாழ்த்தியுள்ளது.
காஸியாபூர் திறந்தவெளி குப்பைக் கிடங்கை பாஜக அரசு டெல்லிவாசிகளுக்குப் பரிசாக வழங்கியுள்ளது. இந்த குப்பைக்கிடக்கில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேடு விரைவில் தாஜ்மஹாலின் உயரத்தை விஞ்சிடும் போல" என்றார்.