தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: காவல் துறை விசாரணை - சுல்பிகர் குரேஷி கொலை வழக்கு

டெல்லி: வடகிழக்கு டெல்லியிலுள்ள ஒரு மசூதிக்கு வெளியே இன்று (நவ.23) காலை பாஜக பிரமுகரை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாஜக பிரமுகர் சுல்பிகர் குரேஷி சுட்டுக் கொலை
பாஜக பிரமுகர் சுல்பிகர் குரேஷி சுட்டுக் கொலை

By

Published : Nov 23, 2020, 5:02 PM IST

டெல்லி நந்த் நாக்ரி பகுதியின் பாஜக தலைவரும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான சுல்பிகர் குரேஷி, தொழுகைக்காக தனது மகனுடன் இன்று (நவ. 23) காலை மசூதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, மசூதிக்கு வெளியே இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் குரேஷியையும், அவரது மகனையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், குரேஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது மகனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், மருத்துவமனை சென்ற காவல் துறையினர் குரேஷி மகனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

குரேஷியின் மகன் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி முடிவு தவறு என்பதை அதிமுக உணரும்: தமிமுன் அன்சாரி!

ABOUT THE AUTHOR

...view details