பிகார் மாநிலம் பாட்னாவில் பியூர் பகுதியில் வசித்து வந்த பாஜக மண்டல துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா, இன்று காலை 6 மணியளவில் வீட்டின் அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார்.
பாட்னாவில் வாக்கிங் சென்ற பாஜக மண்டல துணை தலைவர் சுட்டுக்கொலை! - பாஜக மண்டல தலைவர் கொலை
பாட்னா: பாஜக, மண்டல துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா, வீட்டின் அருகே வாக்கிங் செல்கையில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
jp
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்த வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளார். இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.