தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் லால் சௌக்கில் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள லால் சௌக்கில் ரும்ஸ்யா ரஃபிக் என்ற பாஜக தலைவர் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

JK
JK

By

Published : Aug 5, 2020, 4:38 PM IST

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 5) ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து அங்குள்ள பாஜகவினர் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் மாற்றப்பட்டன. இதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு இருந்த பிரத்யேக கொடி, சட்டம் உள்ளிட்டவை நீக்கப்பட்டன.

இதைப் பறைசாற்றும் விதமாக பாஜகவை சேர்ந்த பெண் தலைவரான ரும்ஸ்யா ரஃபிக், காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் உள்ள லால் சௌக் பகுதியில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், இந்த தினத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார். சட்டப்பிரிவு 370 நீக்கம் பெண்களுக்கு உரிமைகளை அளித்துள்ளது. பிராந்தியத்தை வளர்ச்சியின் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது. அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்துள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க:'இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு'- சௌமியா சுவாமிநாதன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details