சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான், உத்தரப் பிரதேசம் ராம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதயில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தான் கோழி, ஆடுகள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டதாகக் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். அவர் மீது நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலின்போது ஜெயப்பிரதாவை அசாம் கான் மோசமாக விமர்சித்தார். பெண்களை கண்ணீர் சிந்தவைத்ததற்காகதான் தற்போது எல்லா பொது மேடைகளிலும் அசாம் கான் கண்ணீர் விடுகிறார் என ஜெயப்பிரதா விமர்சித்துள்ளார்.