நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக மக்களவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பிக்களே ஆல் பிரஸன்ட் ஆகுங்கள் - பாஜக, காங்கிரஸ் கொறடா - பாஜக
டெல்லி: மக்களவை கூட்டத்தொடரில் பாஜக எம்பிக்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
இந்நிலையில் தற்போது ஜூலை 25ஆம் தேதி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் விடுமுறை எடுக்காமல் கண்டிப்பாக மக்களவைக்கு வரவேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, பாஜக தனது மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இதேபோன்ற கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் தங்கள் மக்களவை உறுப்பினர்களும் கண்டிப்பாக வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்திருக்கிறது.