மத்தியப் பிரதேசத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று, சுயேச்சை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியோரின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதையடுத்து, மற்ற கட்சி உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல பாஜக முயல்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரம்பையை விமானம் மூலம் பாஜக மூத்தத் தலைவர் புபேந்திர சிங் அழைத்து வரவில்லையா?. இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறாரா?