டெல்லி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - தலைமை அலுவலகம்
டெல்லி: பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அங்குள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
BJP
இது குறித்து காவல் துறை தரப்பில் கேட்டபோது, கர்நாடகா மாநிலத்தின் மைசூரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.