மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நவம்பர் மாதம் முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை பாஜக கடுமையாக எதிர்த்துவருகிறது.
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் இமர்தா தேவி, "நாங்கள் மகாராஷ்டிராவிற்கு சென்று அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்துள்ளோம். 2016ஆம் ஆண்டு முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது. அங்கு முட்டைகள் வழங்குவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உணவை வைத்து அவர்கள் அரசியல் செய்கின்றனர். மத்தியப் பிரதேச குழந்தைகளிடம் அவர்கள் ஏன் பகையை கடைப்பிடிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. மருத்துவர்களை கலந்தாலோசித்த பிறகே குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது" என்றார்.