தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவின் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பாஜகவிற்கு வாட்ஸ் அப் மேல் பிடி

டெல்லி: 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

bjp-has-hold-over-whatsapp-rahul-gandhi
bjp-has-hold-over-whatsapp-rahul-gandhi

By

Published : Aug 29, 2020, 4:52 PM IST

அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியை குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாட்ஸ்அப் செயலிக்கும், பாஜகவிற்கும் இடையே ரகசிய உறவு இருப்பதை அமெரிக்காவின் டைம் பத்திரிகை அம்பலப்படுத்தி உள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலி பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

வாட்ஸ்அப் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்க மோடி அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. வாக்காளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அவர்கள் இந்த சமூக வலைதளங்கள் மூலம் போலி செய்திகளையும் வெறுப்பையும் பரப்பி வருகின்றனர்.

தற்போது இதனை அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளன" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆகஸ்ட் 16ஆம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஒருவர் பாஜகவும், ஆர்எஸ்எஸ்வும் இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை கட்டுப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details