தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தைரியமிருந்தால் காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிடட்டும்: அமித் ஷா சவால்!

நவாப்பூர்: காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்துவரும் நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் கட்சிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

Amit Shah

By

Published : Oct 19, 2019, 10:33 PM IST

மகாராஷ்ட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசிநாள் பரப்புரை இன்று நடைபெற்றது. அதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நவாப்பூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில்தான் அதிகமாக உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பொய்யான வாக்குறுதிகளைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் பாஜக அம்மக்களுக்காக பல்வேறு நன்மைகளைச் செய்துவருகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒருநாள் மட்டுமே உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவாலை விடுக்கிறேன்.

மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என அறிவிப்பை வெளியிடுங்கள். காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தபோது அப்போதைய பிரதமர் வாய் திறக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடியோ சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளார்" எனப் பேசினார்.

இதையும் படிக்கலாமே: ராகுல் காந்தி பரப்புரை செய்தால் பாஜக வெற்றி பெறுவது உறுதி: யோகி ஆதித்யநாத்!

ABOUT THE AUTHOR

...view details