தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திப்பு ஜெயந்திக்கு முற்றுப்புள்ளி; வேலையைக் காட்டும் எடியூரப்பா! - காங்கிரஸ்

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அரசு விழாவாக நடத்தப்பட்ட திப்பு ஜெயந்தி விழாவை அரசு நிகழ்ச்சி பட்டியலில் இருந்து பாஜக அரசு நீக்கியுள்ளது.

Tipu Sultan

By

Published : Jul 30, 2019, 10:00 PM IST

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முக்கியமான சுகந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் திப்பு சுல்தான். இவரின் நினைவைப் போற்றும் விதமாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, திப்புவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, திப்பு சுல்தான் சுகந்திர போராட்ட வீரர் அல்ல எனக் கூறி பாஜக போராட்டத்தில் குதித்தது. இந்த விவகாரம் பல காலமாக சர்ச்சையை கிளப்பி வந்தது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து அரசு விழா பட்டியலில் இருந்து திப்பு ஜெயந்தியை நீக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "நான் முதலமைச்சராக இருந்தபோதுதான் திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தேன். என்னை பொறுத்தவரை, திப்பு சுல்தான் இந்தியாவின் முதல் சுகந்திரப் போராட்ட வீரர். பாஜக மதசார்பற்ற கொள்கையை பின்பற்றவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details