மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒன்பது மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக புகார் - தேர்தல் வன்முறை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அடியாட்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் அளித்தனர்.
அப்போது, திரிணாமுல் கட்சியினர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அதில், தேர்தல் ஆணையத்தின் சமாதான் செயலி மூலம் மொத்தம் 417 புகார்கள் அளிக்கப்பட்டன. அதில், 227 புகார்கள் தீர்த்துவைக்கப்பட்டன. இதில், 190 புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவங்கள், தேர்தலின் வன்முறை குணாதிசயத்தையும் தேர்தல் ஆணையத்தின் ஆர்வமின்மையைக் காட்டுகிறது. வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை நன்கு ஆராய்ந்து வன்முறையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸின் அடியாட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.