தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜனசங்' நிறுவனர் நினைவு தினம்: அமித் ஷா அஞ்சலி! - சியாம பிரசாத் முகர்ஜி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் முன்வடிவமான ஜனசங் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சியாம பிரசாத் முகர்ஜியின் 66ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சியாம பிரசாத் முகர்ஜி

By

Published : Jun 23, 2019, 1:37 PM IST

முன்னாள் பிரதமர் நேரு அமைச்சரவையில் வர்த்தகம்; தொழில் துறை அமைச்சராகவும், ஜனசங் கட்சியின் நிறுவனராகவும் இருந்த சியாம பிரசாத் முகர்ஜியின் 66ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தலைநகர் தில்லியில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்துக்கு மத்திய உள் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜி அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவராக இருந்தவர். இவர் 1953ஆம் ஆண்டு காஷ்மீரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஜே.பி.நட்டா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.பி. நட்டா, "சியாம பிரசாத் முகர்ஜியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; அவரின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என பலர் வேண்டுகோள் விடுத்தனர். நேரு அதனை ஏற்கவில்லை. அவரின் தியாகம் வீணாகாது. அவரின் கொள்கைகளை பாஜக முன்னெடுக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details