தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வழக்கு: குல்தீப் சிங் பாஜகவிலிருந்து நீக்கம்! - Kuldeep singh

டெல்லி: உன்னாவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குல்தீப் சிங்

By

Published : Aug 1, 2019, 1:26 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி விபத்துக்குள்ளானார். இந்த விபத்திலும் குல்தீப் சிங்குக்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்தது.

இவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகமான நிலையில், குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்கி பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details