தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விநாயகர் சதுர்த்தி கொண்டாட பாஜக கோரிக்கை - puducherry state

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

bjb meet
bjb meet

By

Published : Aug 20, 2020, 2:05 AM IST

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநான் தலைமையில், இந்து முன்னணி சனில் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த கோரிக்கை மனு அளித்தனர்.

இதற்கு, நீதிமன்றம் உத்தரவுப்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி முதலமைச்சர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், "பாஜக சார்பில் அனைத்து பகுதிகளிலும் அவரவர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யவுள்ளோம். நாங்கள் பொது இடங்களில் வைக்காமல், அவரவர் சொந்த இடங்களில் வைக்க அரசு தடை விதிக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க:இறுதிச்சடங்கிற்கு சோகத்துடன் தயாராகும் கிராமம்; வீர மரணமடைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் திரிபாதி!

ABOUT THE AUTHOR

...view details