தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸுக்குள் கலகத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்? - காங்கிரஸ்

பெங்களூரு: சிவக்குமாரின் கைதுக்கு பின்னணியில் சித்தராமையா உள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

Congress

By

Published : Sep 8, 2019, 8:52 PM IST

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமாரை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் பாஜக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், டி.கே. சிவகுமாரின் கைதுக்கு பின்னணியில் சித்தராமையா இருக்கலாம் என தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், சிவகுமாரின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் அவர் இதனை செய்திருக்கலாம் எனவும் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இருந்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்தக் கூட்டணியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிய சமயத்தில் டி.கே. சிவகுமார்தான் அவர்களை சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நளின் குமார் பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக கலகம் செய்ய முயற்சிப்பதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details