தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவைத் தேர்தல்: நேரடி போட்டியில் காங் - பாஜக - நேரடி போட்டியில் காங் - பாஜக

மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத், கர்நாடக மாநிலங்களைத் தொடர்ந்து மணிப்பூரிலும் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

காங் - பாஜக
காங் - பாஜக

By

Published : Jun 10, 2020, 3:44 PM IST

ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு, மார்ச் 26ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மணிப்பூரிலுள்ள ஒரு இடத்திற்கு போட்டியிட பாஜக, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி கட்சிகள் ஆயுத்தமாகின. இதனைத் தொடர்ந்து, மார்ச் 13ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக, மாநிலங்களவைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 9ஆம் தேதி முடிந்தது. காங்கிரஸ் சார்பில் மங்கு பாபுவும் பாஜக சார்பில் லிசேம்பா சனாஜவுபா போட்டியிடவுள்ளனர். நாகா மக்கள் முன்னணி சார்பாக கஷுங் வேட்புமனு தாக்கல் செய்தார். திடீரென இவர் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்றுள்ளார். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜகவைச் சேர்ந்த பாபாநந்தாவின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.

ஏற்கனவே, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களை வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை காங்கிரஸ் வேறு மாநிலத்துக்கு அனுப்பியும் பாதுகாத்துவருகிறது.

இதையும் படிங்க: வாகன உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details