கரோனா, சீனப் பிரச்னை, பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் ராகுல் காந்தி பாஜகவை தொடர்ந்து விமர்சித்துவந்தார். அதன் ஒரு பகுதியாக, #TruthWithRahulGandhi என்ற பெயரில் தனது கருத்துகளை நாட்டு மக்களிடையே வீடியோ மூலம் தெரிவித்துவருகிறார். இன்று வெளியிடப்பட்ட அதன் தொகுப்பில், சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் கட்டமைக்கப்பட்ட பொய்யான பிம்பமே இந்தியாவின் பலவீனம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி தந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்பு, வெளியுறவு போன்ற விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ‘Project RG Relaunch’ என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ள வீடியோ தொகுப்பு மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
ராகுல் காந்தி எப்போதும் போல் தரவுகளில் பலவீனமாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் பலமாகவும் உள்ளார். பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு செய்த பழைய பாவத்தை கழுவி இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்வதில் ஒரு குடும்பத்தின் விரக்தி வெளிப்பட்டுள்ளது.