நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகரான டெல்லியில் இதிகாச நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஃபகன் சிங் குலஸ்தே, மத்திய முன்னாள் அமைச்சர் சுரேஷ் பாபு ஆகியோர் கடந்தாண்டு நவராத்திரி விழாவின்போது நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர்.
- சர்ஜிக்கல் ஸ்டிரைக்,
- தேசிய குடிமக்கள் பதிவேடு
குறித்த வசனங்கள் கடந்தாண்டு நடந்த நாடகங்களில் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "பாஜகவினர் இம்மாதிரியான நாடகங்களில் நடிப்பது தவறல்ல; ஆனால் இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் நடிப்பது தவறு. மதச்சார்பற்ற கொள்கைக்கு இது எதிரானது" என சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.