தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் மசோதா நிறைவேற்றம்’ ஓராண்டு நிறைவைக் கொண்டாட பாஜக திட்டம்! - பாஜக கொண்டாட்டம்

காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

bjp-asks-followers-to-celebrate-one-year-of-article-370-abrogation-implementation-of-triple-talaq-act
bjp-asks-followers-to-celebrate-one-year-of-article-370-abrogation-implementation-of-triple-talaq-act

By

Published : Jul 24, 2020, 6:38 PM IST

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரும்பான்மையாக பாஜக வென்று இரண்டாவது முறை மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டம் சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் முத்தலாக் தடைச்சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியது.

இந்தச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகியுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனையொட்டி #EkBharatEkatmaBharat ஏக்பாரத் ஏக்ஆத்மாபாரத் என்னும் பரப்புரையை நாடு முழுவதும் மேற்கொள்ள பாஜக ஆலோசித்துள்ளது. அதனோடு சேர்த்து ஒரு வருட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை விளக்கக் கூட்டமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கரோனாவை போலவே சீனா விஷயத்திலும் பேரழிவு நடக்கும்?' - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details