மத்தியப் பிதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஜோதிராதித்ய சிந்தியா. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதில் ராஜஸ்தானில் பெற்ற வெற்றிக்கு சச்சின் பைலட்டும் மத்தியப் பிரதேசத்தில் பெற்ற வெற்றிக்கு ஜோதிராதித்ய சிந்தியாவும் காரணமாகப் பார்க்கப்பட்டனர்.
பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி! - rajya sabha election 2020
17:54 March 11
டெல்லி: பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே ஜோதிராதித்ய சிந்தியாவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து சச்சின் பைலட்டிற்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜோதிராதித்ய சிந்தியா அப்போது மக்களவை உறுப்பினராக இருந்ததால், அவருக்கு வேறு பதவிகளும் அளிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிந்தியா பாஜகவின் கிருஷ்ண பால் சிங் யாதவிடம் தோல்வியடைந்தார்.
இதனால், 2020ஆம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சிந்தியா முயற்சி எடுத்தார். இருப்பினும், அதில் சிக்கல் தொடர்ந்ததால் அவர் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், இன்று மாலை மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதில், மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாட்டி வழியில் பேரன் - சிந்தியா குடும்பத்தின் வரலாறு