டெல்லியில் இன்று மாயாவதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"மத்திய அரசும் சரி; மாநில அரசுகளும் சரி; புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் அக்கறை இல்லாமல்தான் நடந்து கொள்கிறார்கள்.
கூலித் தொழிலாளர்கள் பசியால் உயிரிழந்தும் வருமானம் இன்றி தவித்துவரும் சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு கேவலமாக அரசியல் செய்து வருகிறார்கள்.
இந்த இருகட்சிகளும்தான் தொழிலாளர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுகூட, ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை. இந்த இருகட்சிகளாலும் தான் ஏராளமான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்ந்தனர்" என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுடன் இணையப்போவதாகத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறன். பகுஜன் சமாஜ் இந்த இருகட்சிகளுடனும் எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்காது" என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்கும் கண்ணாடிப் பெட்டி!