தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக தொடர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறது” - அசோக் கெலாட் - பாஜக Vs காங்கிரஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அரசை கவிழ்க்க ஜனநாயகத்திற்கு விரோதமான வழியில் பாஜக தொடர்ந்து செயலாற்றிவருகிறதென அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்

By

Published : Dec 7, 2020, 4:24 PM IST

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் ஆட்சியிலும், கட்சியிலும் கடந்த ஜூலை மாதம் விரிசல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மோதலாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளை காங்கிரஸ் மேலிடம் பறித்தது. இதனிடையே, ஆகஸ்ட் மாதம் சச்சின் பைலட்டை நேரில் அழைத்து சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அவரை சமாதானம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு நெருக்கடியை உருவாக்க பாஜக முனைந்ததாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இன்று(டிச.12) அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் அசோக் கெலாட் மீண்டும் முன்வைத்துள்ளார்.

சிரோஹி மாவட்டம் சிவ்கஞ்சில் புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, காணொலி வழியே உரையாற்றிய அவர் , ”மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிக்காட்டலில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டினர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களோடு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டே மாநில அரசை கவிழ்க்க முனைந்தனர். இப்படித்தான் இந்த முழு அரசியல் ஆட்டமும் விளையாடப்பட்டது. அரசை காக்க ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மேக்கன், அவினாஷ் பாடன், வேணுகோபால் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இங்கு வந்து, அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதற்கு பிறகுதான் அரசை காப்பாற்ற முடிந்தது.

எங்கள் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து எங்களோடு இருந்தனர். அவர்கள் எந்தவொரு ஆசை வார்த்தைகளுக்கும் மயங்கவில்லை. அழுத்தத்திற்கும் இணங்கவில்லை. தோல்வியுற்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைபற்ற, ஜனநாயக விரோதமான இந்த வகை சதித்திட்டங்களைதான் பாஜக அரங்கேற்றிவருகிறது. இன்றைக்கும் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க ஜனநாயக விரோதமாக பாஜக தொடர்ந்து செயலாற்றிவருகிறது ” என்றார்.

இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, “ அரசை நடத்துவதில் தோல்வியுற்ற முதலமைச்சர் அசோக் கெலாட் விரக்தியில் இத்தகைய நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். ராஜஸ்தானில் காங்கிரசுக்குள் ஏராளமான சிக்கல்கள் நிலவிவருவதாக நம்பப்படுகிறது. ஆட்சிக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் எனும் நிலையில் அதனை பாஜக மீது சுமத்த பார்க்கிறார்கள்” என கூறினார்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநில அரசு டிசம்பர் 17ஆம் தேதியன்று தனது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யவுள்ள நிலையில், நீக்கப்பட்ட பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில், கெலாட்டை ஆதரித்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளதாக தெரிகிறது.

இதனை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற கர்நாடகா அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details